BSNL தன் ப்ரீபெய்டு வாடிக்கையாளர்களுக்கு ரூபாய்.599 ரீசார்ஜ் பிளானில் உள்ளூர், எஸ்டிடி மற்றும் ரோமிங் உள்ளிட்ட அன்லிமிடெட் காலிங், தினசரி 3 ஜிபி அதிவேக டேட்டா மற்றும் தினமும் 100 sms-களை வழங்குகிறது. இந்த ரீசார்ஜ் திட்டமானது MTNL வட்டங்களிலும் வேலை செய்கிறது. அதோடு இத்திட்டத்தில் முழு 84 நாட்கள் வேலிடிட்டியும் கிடைக்கும்.

இதில் சிறப்பு என்னவெனில் வாடிக்கையாளர்கள் நாளொன்றுக்கு ரூ.7 மட்டுமே செலவழிக்க வேண்டும். இந்த திட்டத்தில் 84 நாட்களுக்கு 3gp டேட்டா வழங்கப்படுகிறது. தினமும் டேட்டா வரம்பு முடிந்த பிறகும் BSNL வாடிக்கையாளர்கள் 40Kbps வேகத்தில் வரம்பற்ற டேட்டாவை தருகிறது. அந்த வகையில் இதைப் பயன்படுத்தி ஈமெயில் மற்றும் உடனடி செய்தி உள்ளிட்ட அவசர தகவல்களுக்கு பயன்படுத்தலாம்.