இந்தியாவில் மிகவும் பிரபலமான கிரிக்கெட் போட்டிகளில் ஒன்று ஐபிஎல். கடந்த 31-ஆம் தேதி ஐபிஎல் போட்டிகள் கோலாகலமாக தொடங்கியுள்ள நிலையில், ஐபிஎல் போட்டிகளை நேரலையில் ஜியோ, ஏர்டெல் மற்றும் VI போன்றவைகளில் பார்த்துக் கொள்ளலாம். ஐபிஎல் போட்டிகளை 4k தரத்தில் காண்பதற்கு 3ஜிபி டேட்டா திட்டம் உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

அதன்படி ஜியோவில் 214 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் 14 நாட்களுக்கு அன்லிமிடெட் வாய்ஸ், எஸ்எம்எஸ் மற்றும் 3ஜிபி டேட்டா போன்றவைகள் கிடைக்கும். இதில் கூடுதலாஇ 2ஜிபி டேட்டா வசதியும் கிடைக்கிறது. இதே போன்ற 399 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் 28 நாட்களுக்கு 3ஜிபி டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் மற்றும் எஸ்எம்எஸ் போன்ற வசதிகள் கிடைக்கும். இதில் கூடுதலாக 6ஜிபி டேட்டா வசதி கிடைக்கும். அதன் பிறகு 999 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் 84 நாட்களுக்கு 3ஜிபி டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ், எஸ்எம்எஸ் மற்றும் கூடுதலாக 40 ஜிபி டேட்டா வசதி கிடைக்கிறது.

இதனையடுத்து VI-ல் ரூ. 359 (3ஜிபி), ரூ. 475 (3.5ஜிபி), ரூ. 475-ல் மற்றொரு‌ திட்டம் (4ஜிபி), ரூ. 699 (3ஜிபி) என மொத்தம் 4 திட்டங்கள் இருக்கிறது. இதில் 699 ரூபாய் திட்டத்தில் மட்டும் 56 நாட்கள் வேலிடிட்டி பலன்கள் இருக்கிறது. மற்ற 3 திட்டத்திலும் 28 நாட்கள் வேலிடிட்டி பலன்கள் இருக்கிறது. மேலும் ஏர்டெல் நிறுவனத்தில் 499 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் 28 நாட்கள் வேலிட்டியுடன் 3ஜிபி டேட்டா, அன்லிமிடெட் கால்ஸ், எஸ்எம்எஸ் போன்ற வசதிகளும், 699 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் 56 நாட்கள் வேலிட்டியுடன் 3 ஜிபி டேட்டா கிடைக்கும். இதனுடன் ஏர்டெல் ஓடிடி பலன்களும் கிடைக்கிறது.