உலக அளவில் பல கோடி மக்களால் whatsapp பயன்படுத்தப்படுகிறது. மெட்டா நிறுவனம் வாட்ஸ் அப்பில் அடிக்கடி புதுப்புது அப்டேட்டுகளை வழங்கி வருகிறது. சில வசதிகள் ஏற்கனவே அறிமுகமானாலும் இன்னும் சில வசதிகள் மெட்டாவின் சோதனையில் இருக்கிறது. இந்நிலையில் தற்போது வாட்ஸ் அப் நிறுவனம் புதிய பயனர் அனுபவம், சிறப்பான மெசேஜிங் மற்றும் ஆடியோ மெசேஜ் என பல புதுமையான விஷயங்களை வெளியிடவுள்ளது. இவை தற்போது பீட்டா சோதனையில் உள்ள நிலையில் புது அப்டேட்டுகள் ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் தளங்களில் வழங்கப்படும்.

‌ இதனுடன் புதிய Desktop App ஒன்றையும் அறிமுகம் செய்ய இருக்கிறது. நாம் சில நேரத்தில் தவறாக மெசேஜ் அனுப்பி விட்டால் அதை டெலிட் செய்வதற்கு பதிலாக அந்த மெசேஜை எடிட் செய்வதற்கு 15 நொடிகள் கால அவகாசம் கொடுக்கப்படும். அதற்குள் நாம் அனுப்பிய மெசேஜை எடிட் செய்ய வேண்டும். 15 புதிய மெசேஜ் டியூரேஷன் வசதி அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது. அதாவது disappearing messages மூலம் சென்டர் மற்றும் ரிசியூவர் என சேர்த்து 24 மணி நேரத்தில் நாம் அனுப்பிய மெசேஜ் மறையும் ஆப்ஷன் இருக்கிறது.

இதில் தற்போது புதிய ஆப்ஷன் கொடுக்கப்பட இருக்கிறது. அதாவது Senter 24 மணி நேரம் duration, receiver 7 நாட்கள் அல்லது 90 நாட்கள் வரை Disappearing messages வைத்துக் கொள்ளலாம். நாம் ஒருவருடன் சேட் செய்யும் போது அவரின் பக்கத்தை Pin செய்து வைத்தால் நாம் வெளியில் சென்று விட்டு மீண்டும் திரும்பும்போது சுலபமாக அவரிடம் மீண்டும் மெசேஜ் செய்யலாம். நாம் யாருக்காவது ஆடியோ மெசேஜ் அனுப்பினால் அது குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு தானாக மறையும் ஆப்ஷனும் வழங்கப்படும். இதில்‌‌ listen Once வசதியும் இருக்கிறது. மேலும் ஆடியோ சேட் ஆப்ஷனும் விரைவில் அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது.