மத்திய அரசு நிறுவனமான பிஎஸ்என்எல் இந்த வருடம் ஆகஸ்ட் மாதம் முதல் நாடு முழுவதும் 4ஜி சேவையை தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆத்மநிர்பார் கொள்கைக்கு இணங்க பிஎஸ்என்எல் நிறுவனம் 4ஜி சேவைகளுக்கு முற்றிலும் உள்நாட்டு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உள்ளது. சோதனை கட்டத்தில் 700 – 2100 மெகா ஹெர்ட்ஸ் ஸ்பெக்ட்ரம் பேண்டில் கட்டப்பட்ட 4g நெட்வொர்க் 40-45 Mbps டேட்டா வேகத்தை பதிவு செய்துள்ளதாக பிஎஸ்என்எல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.