Vivo நிறுவனமானது விவோ ஒய் சீரிஸ் போனை அறிமுகப்படுத்தியுள்ளது. பட்ஜெட் ஸ்மார்ட்போனான இது விவோ ஒய்11 என கூறப்படுகிறது. பட்ஜெட் ஸ்மார்ட்போனாக இருப்பினும் இந்த போன் பல்வேறு அற்புதமான அம்சங்களுடன் வருகிறது. இப்போனில் பெரிய திரை, வலுவான பேட்டரி மற்றும் பேங் கேமரா போன்றவை இருக்கிறது.

இதன் வடிவமைப்பை பார்த்து கண்டிப்பாக பயனாளர்கள் மகிழ்ச்சியடைவர். விவோ ஒய்11 ஸ்மார்ட் போனில் MediaTek Helio P35 செயலி இருக்கிறது. இது 2gp விர்ச்சுவல் ரேம் தொழில்நுட்பத்துடன் 4gp மற்றும் 6gp ரேம் விருப்பங்களில் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. Vivo Y11 4gp ரேம் மாறுபாட்டின் விலையானது RMB 899 (சுமார் ரூ. 10,000) ஆகும். அதே நேரம் 6gp வகையின் விலை RMB 999 (சுமார் ரூ. 12,000) ஆகும். தற்போதைக்கு இந்த ஸ்மார்ட் போன் சீனாவில் விற்பனையில் இருக்கிறது.