மெட்டா நிறுவனத்தின் கீழ் இயங்கும் வாட்ஸ்அப் செயலியானது பிப்ரவரியில் இந்தியாவில் பிரத்தியேகமாக பதிவு செய்யப்பட்ட கணக்குகளை தடை செய்தது. அதாவது பிப்ரவரியில் 45.97 லட்சம் இந்திய கணக்குகளை வாட்ஸ் அப் தடை செய்தது. வழிகாட்டுதல்களை மீறியதற்காக இவ்வளவு  கணக்குகள் தடைசெய்யப்பட்டன. இந்தியாவின் தகவல் தொழில்நுட்ப சட்டம், 2021 இன் ஒரு பகுதியாக வாட்ஸ்அப் அதன் மாதாந்திர அறிக்கையில் புதிய தகவலை வெளியிட்டது.

அதாவது பயனர்களிடமிருந்து அறிக்கைகள் வருவதற்கு முன்பாகவே சுமார் 13 லட்சம் கணக்குகள் தடை செய்யப்பட்டதாக வாட்ஸ்அப் தெரிவித்துள்ளது. பிப்ரவரியில் 2,804 புகார்களைப் பெற்றதாகவும், அதன் அடிப்படையில் 504 கணக்குகள் தடை செய்யப்பட்டன எனவும் தகவல் வெளியாகியுள்ளது.