இந்தியாவின் பொதுத்துறை வங்கியான பேங்க் ஆப் இந்தியா வங்கி ஃபிக்ஸட் டெபாசிட் களுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது. அதன்படி 7 நாட்கள் முதல் 10 ஆண்டுகள் வரை உள்ள பல்வேறு விதமான பிக்சட் டெபாசிட் திட்டங்களுக்கு வட்டி விகிதமானது 3% முதல் 7.15% வரை வட்டி விகிதம் நிறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் 1 கோடிக்கு உட்பட்ட ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களுக்கான வட்டி விகிதம் உயர்த்தப்பட்டுள்ள நிலையில், சுய ஆரம்ப டெபாசிட் திட்டம் என்ற புதிய திட்டத்தையும் தொடங்கியுள்ளது. இந்த திட்டத்தில் கீழ் பொது வாடிக்கையாளர்களுக்கு 7.15% வட்டியும், மூத்த குடி மக்களுக்கு 7.65% வட்டியும், சூப்பர் சீனியர் சிட்டிசன்களுக்கு 7.8 சதவீத வட்டியும் வழங்கப்படுகிறது.