இந்திய தபால் அலுவலகத்தில் பல்வேறு விதமான சிறு சேமிப்பு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த சிறுசேமிப்பு திட்டங்களுக்கு மத்திய அரசால் வட்டி விகிதமும் அடிக்கடி அதிகரிக்கப்படுகிறது. அந்த வகையில் தற்போது கிஷான் விகாஸ் பத்ரா திட்டத்தில் வட்டி விகிதம் தற்போது உயர்த்தப்பட்டுள்ளது.

அதன்படி கிஷான் விகாஸ் பத்திரங்களுக்கான வட்டி விகிதத்தை 30 அடிப்படை புள்ளிகள் வரை உயர்த்தியுள்ளது. இந்த திட்டத்தில் இதுவரை முதலீட்டாளர்கள் 7.2 விதவித வட்டி லாபத்தை பெற்று வந்த நிலையில், தற்போது 7.5 சதவீதமாக வட்டி விகிதம் உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் இந்த உயர்த்தப்பட்ட புதிய வட்டி விகிதம் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் ஜூன் 30 ஆம் தேதி வரை நடைமுறையில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.