இந்தியாவில் பெரும்பாலான பயணிகள் ரயில் பயணத்தையே விரும்புகிறார்கள். ஏனெனில் ரயிலில் கட்டணம் குறைவு மற்றும் வசதிகள் அதிகம். அதிக பயணிகள் ரயிலில் செல்வதால் ரயில்வே துறை புது புது வசதிகளை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் நாடாளுமன்றத்தில் இனி ரயில்வே நிலையங்கள் மற்றும் ரயில்களில் உயிர்காக்கும் மருந்துகள், முதலுதவி பெட்டிகள் மற்றும் ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் போன்றவைகள் கிடைக்கும் என தெரிவித்துள்ளார்.

அதன்படி ரயிலில் டிக்கெட் பரிசோதகர், ஸ்டேஷன் மாஸ்டர், காவலர் மற்றும் கண்காணிப்பாளர் ஆகியோருக்கு முதலுதவி கொடுக்க பயிற்சி கொடுக்கப்படும். அருகில் உள்ள மருத்துவமனைகள் மற்றும் மருத்துவர்களின் தொலைபேசி நம்பர்கள் அடங்கிய பட்டியல் அனைத்து ரயில் நிலையங்களிலும் இருக்கிறது. மேலும் இந்த புதிய திட்டம் தற்போது ரயில் பயணிகளிடையே வரவேற்பை‌ பெற்றுள்ளது.