கேரள மாநிலத்தில் ஆலப்புழா-கண்ணூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் நடு இரவில் நடந்த ஒரு சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது. அதாவது ஆலப்புழாவில் இருந்து கண்ணூர் நோக்கி எக்ஸ்பிரஸ் ரயில் ஒன்று சென்று கொண்டிருந்தபோது இரவு 10 மணியளவில் முதியவர் ஒருவர் கழிவறைக்கு சென்றுள்ளார். அப்போது 35 வயது மதிக்கத்தக்க ஒருவர் சிகரெட் பிடித்துக் கொண்டிருந்தார். அவரிடம் முதியவர் சிகரெட் பிடிப்பது தவறு உடனே சிகரெட்டை கீழே போடுங்கள் என்று கூறியுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றவே 35 வயது மதிக்கத்தக்க நபர் தன் பாக்கெட்டில் வைத்திருந்த பெட்ரோல் முதியவர் மீது ஊற்றி தீ வைத்து கொளுத்தினார்.

முதியவர் வலி தாங்க முடியாமல் அங்கும் இங்கும் ஓடி சக பயணிகளை கட்டிப்பிடித்ததில் அவர்கள் மீதும் தீப்பிடித்து எரிந்தது. இந்த தீ விபத்தில் சிக்கி 1 வயது குழந்தை உட்பட 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். அதன் பிறகு 9 பேர் மருத்துவமனையில் பலத்த காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அபாய சங்கிலி நிறுத்தப்பட்டதால் ரயில் நிறுத்தப்பட்டது. உடனடியாக போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். மேலும் நடு இரவில் பயணிகள் மீது தீ வைத்துக் கொளுத்திய சைக்கோ குற்றவாளியை கண்டுபிடிக்க 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.