நடிகை சமந்தா விஜய் தேவரகொண்டாவுடன் குஷி படத்தில் நடித்துள்ளார். இந்த படமானது செப்டம்பர் 1ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்த படம் தமிழ், தெலுங்கு, கன்னடம் மலையாளம், இந்தி என பல மொழிகளிலும் வெளியாகிறது. மைத்திரி மூவி மேக்கர்ஸ் பேனரில் நவீன் எர்நேனி மற்றும் ரவிசங்கர் இந்த படத்தை தயாரிக்கிறார்கள். தற்போது படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது . ஏற்கனவே பாடல்கள் மூலம் இந்த படம் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில் டிரெய்லர் சுவாரசியமாக இருக்கிறது. குஷி பட குழு ஏற்பாடு செய்த இசை நிகழ்ச்சி விஜய்தேவர கொண்டா சமந்தாவின் சிறப்பு நடனமும் இடம்பெற்றது.

இந்த நிலையில் குஷி திரைப்படம் வெற்றிபெற்றதை கொண்டாடும் விதமாக நடிகர் விஜய் தேவரகொண்டா, சூப்பர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது, அவரின் வருமானத்தில் இருந்து ரூ.1 கோடியை 100 பேருக்கு தலா ரூ.1 லட்சம் என பிரித்து வழங்க போவதாக கூறியுள்ளார். இதற்கான விண்ணப்பம் எனது சமூக வலைத்தளப் பக்கத்தில் இணைக்கப்படும் என்றும், அதில் இருந்து தேர்வு செய்து பணம் வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.