ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில் வெங்கட்பிரபு இயக்கத்தில், நடிகர் விஜய்  நடிப்பில் உருவாகவிருக்கும் ‘தளபதி 68’ படத்தில் அமீர்கான் நடிக்க உள்ளார் என்ற எதிர்பார்ப்பு நிலவியுள்ளது. ஏனெனில், இந்த படத்தை தயாரிக்கும், ஏஜிஎஸ் நிறுவனத்தின் ஐஸ்வர்யா கல்பாதி சமீபத்தில் அமீர்கானை சந்தித்துள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியானது.

அதில் “மிகப் பெரிய நடிகருடன் சில நிமிடங்கள்” என குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது . மேலும் இந்த படத்தில் பிரபல நடிகை சினேகா நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் என்ற தகவல் சமீபத்தில் வெளியானது குறிப்பிடத்தக்கது.