அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான், நயன்தாரா, விஜய் சேதுபதி உள்ளிட்டோர் நடிப்பில் செப்டம்பர் 7 ஆம் தேதி வெளியாகவுள்ள திரைப்படம் ஜவான். சமீபத்தில் நடந்த ‘ஜவான்’ இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சி, சன் டிவியில் ஒளிபரப்பானது. ஆனால், அதில் விஜய் குறித்து இயக்குநர் அட்லீ பேசிய விஷயங்கள் எடிட் செய்யப்பட்டதாக விஜய் ரசிகர்கள் வேதனை தெரிவித்தனர்.

மேலும் விஜய் மீது சன் டிவி வன்மத்தை காட்டியதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஆனால் இந்த இசை வெளியிட்டு விழாவை எடிட் செய்தது கோகுலம் சினிமாஸ் தானாம். இதனால் சன் டிவிக்கும் இந்த விஷயத்திற்கும் எந்த ஒரு சம்மந்தம் இல்லை என தெரியவந்துள்ளது.