சமூக வலைதளங்களில் தற்போது ஒரு பதைபதைக்க வைக்கும் காணொளி வேகமாகப் பரவி வருகிறது. அதில், ஒரு காய்கறி வியாபாரி தனது தள்ளுவண்டியை வீதியில் தள்ளிக்கொண்டு செல்கிறார். அப்போது, அவருக்குப் பின்னால் ஒரு கார் மிக அதிவேகமாக வருவதைக் கவனித்த அவர், சற்றும் தாமதிக்காமல் மின்னல் வேகத்தில் செயல்பட்டு நடைபாதைக்குத் தப்பிச் சென்றார். அடுத்த சில நொடிகளில், கட்டுப்பாட்டை இழந்த அந்த கார் வியாபாரியின் வண்டியைப் பயங்கரமாக மோதித் தள்ளிவிட்டுச் சென்றது. அந்த ஒரு வினாடியில் அவர் சுதாரித்து ஒதுங்கவில்லை என்றால், அவரது உயிருக்கே அது ஆபத்தாக முடிந்திருக்கும்.
Indian Roads are not less than a Final destination movie pic.twitter.com/A9CaIur6NQ
— 🚨Indian Gems (@IndianGems_) January 7, 2026
இந்தக் காணொளியைக் கண்ட பொதுமக்கள் பலரும் கடும் கோபத்துடனும் அதிர்ச்சியுடனும் கருத்துக்களைப் பகிர்ந்து வருகின்றனர். தள்ளுவண்டி சிதறியதைப் பார்க்கும் போது, அந்த ஏழை வியாபாரியின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டிருப்பதை எண்ணிப் பலரும் வருத்தம் தெரிவிக்கின்றனர். அதே சமயம், மக்கள் நடமாட்டம் உள்ள பகுதிகளில் இவ்வளவு அதிவேகமாக காரை ஓட்டி வந்த ஓட்டுநர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், சாலையில் செல்லும் சாதாரண மனிதர்களின் உயிருக்குச் சிறிதும் மதிப்பற்ற நிலை இருப்பதாகவும் சமூக வலைதளங்களில் கண்டனங்கள் எழுந்துள்ளன.
