பாவம் அந்த ஏழை வியாபாரி, தள்ளுவண்டியில் பழங்களை வைத்து விற்றுக்கொண்டிருந்த ஒரு முதியவரின் வண்டியை, ஒரு சொகுசு காரில் வந்த நபர் எட்டி உதைத்து, பழங்களை எல்லாம் சாலையில் கொட்டி நாசம் செய்துள்ளார். “காசு இருக்கு” என்ற திமிரில் அவர் செய்த இந்த அநாகரீகச் செயலைப் பார்த்த மற்றொரு கார் ஓட்டுநர், சும்மா இருக்கவில்லை.

​மின்னல் வேகத்தில் காரிலிருந்து இறங்கி வந்த அந்த ‘ரியல் ஹீரோ’, பழங்களை நாசம் செய்த நபரைச் சட்டையைப் பிடித்து வெளியே இழுத்துப் போட்டுச் சராமாரியாகத் தாக்கினார். அநியாயத்தைக் கண்டு பொங்கி எழுந்த அந்த இளைஞருக்கு இப்போது இணையதளத்தில் பாராட்டுகள் குவிந்து வருகிறது. “தப்பு செஞ்சா தர்ம அடி நிச்சயம்!” என நெட்டிசன்கள் இந்த வீடியோவைப் பகிர்ந்து வருகின்றனர்.