‘கரகாட்டக்காரன்’ படத்தின் மூலம் அறிமுகமான நடிகை கனகாவின் தற்போதைய நிலை குறித்த புகைப்படம் வெளியாகியுள்ளது. சென்னையில் தனியாக வசித்துவரும் அவர், யாரையும் சந்திப்பது கூட இல்லை. வாழ்க்கையில் ஏகப்பட்ட சிரமங்களை சந்தித்த கனகா, தாயின் மரணத்திற்கு பின் மனமுடைந்து தனியாக வாழ்ந்து வருகிறார்.

சமீபத்தில் நடிகை குட்டி பத்மினி கனவாவை சந்தித்துள்ளார். அப்போது இருவரும் எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த புகைப்படத்தில் கனகா மிகவும் குண்டான உடலமைப்புடன் தெரிகிறார். பார்க்க ஆளே மாறிப் போய் காணப்படுகிறார் என நெட்டிசன்கள் பதிவிட்டுள்ளனர்.