தென் கொரியாவின் பிரபல நடிகரான சாங் யாங் க்யூ (வயது 55) நேற்று அதிகாலை சோல் நகரத்திற்கு தெற்கே உள்ள யோஙின் நகரில் ஒரு நிறுத்தப்பட்ட காருக்குள் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பொதுமக்கள் ஒருவர் நபர் மயக்க நிலையில் உள்ளதாக போலீசாருக்கு தகவல் அளித்ததைத் தொடர்ந்து சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார், அவர் உயிரிழந்திருப்பது உறுதிப்படுத்தினர்.
சம்பவத்திற்கு சில நாட்களுக்கு முன்பாகவே சாங் யாங் க்யூ மது அருந்தி வாகனம் ஓட்டிய வழக்கில் கைது செய்யப்பட்டிருந்தார். அவர் தனது வாகனத்தை 5 கிலோமீட்டர் வரை ஓட்டியுள்ளதாக கூறப்படுகிறது. அவரது ரத்தத்தில் 0.08% ஆல்கஹால் உள்ளதாக கண்டறியப்பட்டதால், அவருக்கு உரிமம் ரத்து செய்யப்படும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து, அவரை ENA, SBS உள்ளிட்ட முக்கியமான தொலைக்காட்சி தொடர்களில் இருந்து நீக்கி, மேடை நாடகத்திலிருந்தும் விலக்கப்பட்டது.
1994ஆம் ஆண்டு மேடை நடிகராகத் தொடங்கி, சாங் யாங் க்யூ பல திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் துணை கதாபாத்திரங்களில் திகழ்ந்துள்ளார். “Extreme Job” எனும் கொரியாவின் மிக பெரிய வெற்றிப் படத்தில் நடித்ததன் மூலம் அவர் திரைத்துறையில் தனக்கென ஒரு இடத்தை உருவாக்கினார். தற்போது, அவரது மரணத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சாங் யாங் க்யூவின் மரணம், கொரியாவில் திரையுலக ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
