இலங்கையில் உள்ள ஹற்றன் பகுதியில் உள்ள ஒரு நகைக்கடையில் 26 வயது இளம்பெண் ஒருவன் நகையை திருட முயற்சித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது மஸ்கட் பகுதியைச் சேர்ந்த 26 வயது இளம்பெண் கொழும்புவில் உள்ள ஆடை தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்துள்ளார்.
இவர் கணவரைப் பிரிந்து வாழ்ந்து வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் சம்பவ நாளன்று ஹற்றன் பகுதிக்கு வந்த அந்த இளம் பெண் ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் அடகு வைத்த நகையை மீட்டு அதனை மீண்டும் அடகு வைத்து ரூபாய் 1,10,000 பெற்றுக்கொண்டு ஒரு நகைக்கடைக்கு சென்றுள்ளார். அங்கு தங்க நெக்லஸ் காட்டுமாறு கேட்டுள்ளார்.
திருட முயன்ற பெண்ணின் பையில் கிடைத்த தடயங்கள்..நகைக்கடையில் நடந்த அதிர்ச்சி நிமிடங்கள்!#SriLanka | #CCTV | #Theft pic.twitter.com/dL3osUWrrE
— PttvOnlinenews (@PttvNewsX) August 4, 2025
அதே சமயத்தில் தனது ஒரு கையை கைப்பையினுள் வைத்துக் கொண்டே நகைகளை பார்த்ததை கடைக்காரர் கவனித்துள்ளார். உடனே சுதாரித்துக் கொண்ட கடைக்காரர் கவனமாக நகைகளை அந்த பெண்ணிடம் காட்டியுள்ளார். அப்போது அந்தப் பெண் நகையை தன்னிடம் தருமாறு கேட்டுள்ளார்.
அதற்கு நகைக்கடைக்காரர் கொடுக்க மறுத்ததால் பையில் வைத்திருந்த கையில் ஸ்பிரே ஒன்றை எடுத்து கடைக்காரர் மீது அடிக்க முயற்சித்துள்ளார். அதனை கவனித்த நகைக்கடைக்காரர் உடனே அந்த இளம் பெண்ணின் கையைப் பிடித்து கொண்டு அருகில் உள்ள அக்கம் பக்கம் கடையில் உள்ளவர்களை அழைத்து உள்ளார்.
இதுகுறித்து உடனே காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது அந்த தகவலின் பெயரில் விரைந்து வந்த காவல்துறையினர் அந்த இளம்பெண்ணை கைது செய்தனர். மேலும் அப்பெண்ணிடம் நடத்திய விசாரணையில் தனது தந்தையின் மருத்துவ செலவிற்காக இவ்வாறு செய்ததாக கூறியுள்ளார்.
மேலும் அப்பெண்ணிடமிருந்து பல்வேறு அடகு கடை ரசீதுகளும், தங்கம் முலாம் பூசப்பட்ட நகைகளும் இருந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து அவர் நீதிமன்ற த்தில் ஆஜர் படுத்தப்பட்டார். அந்த வழக்கை விசாரித்த ஹற்றன் நீதிமன்ற நீதிபதி பார்த்திபன் குற்றவாளியான இளம் பெண் குற்றத்தை ஒப்பு கொண்டதைத் தொடர்ந்து ₹5 லட்சம் தனிநபர் ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
மேலும் இந்த வழக்கை வரும் ஆகஸ்ட் மாதம் 5ஆம் தேதி ஒத்தி வைத்துள்ளார். அந்த திருட்டு சம்பவம் குறித்த சிசிடிவி காட்சி வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகிப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
