மகிழ் திருமேனி டைரக்டில் முதல் முறையாக அஜித் நடிக்க இருக்கும் படம் விடாமுயற்சி. இந்த படத்தை லைக்கா நிறுவனமானது தயாரிக்கிறது. மிகப்பெரிய பட்ஜட்டில் உருவாகும் இந்த படத்துக்காக அஜித் ரூ.105 கோடி சம்பளம் வாங்கி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இப்படத்தின் சூட்டிங் வரும் ஜூன் முதல் வாரத்தில் இருந்து தொடங்க படக்குழு திட்டமிட்டு உள்ளனர். அதோடு இப்படத்தில் இரு கதாநாயகிகள் எனவும் அதில் ஒரு கதாநாயகியாக திரிஷா நடிக்க உள்ளார் எனவும் சொல்லப்படுகிறது.

இந்த நிலையில் அஜித் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் வகையில் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது, விடாமுயற்சி படத்தில் அஜித் இரண்டு கதாபாத்திரங்களில் நடிக்கிறார். சென்ற 2010-ம் வருடம் வெளியான அசல் படத்திற்கு பின் விடாமுயற்சி திரைப்படத்தில் தான் அஜித் இரட்டை வேடத்தில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.