விலங்குகள் பேசுவதில்லை என்றாலும், அவற்றின் செயல்கள் ஆயிரம் வார்த்தைகளை விடவும் வலிமையானவை என்பதை நிரூபிக்கும் வகையில் ஒரு நெகிழ்ச்சியான காணொளி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்தக் காணொளியில், ஒரு நபர் தனது வளர்ப்புச் சின்னஞ்சிறு கன்றுக்குட்டியுடன் ஆற்றின் கரையில் நின்று கொண்டிருக்கிறார். திடீரென அவர் ஆற்றில் குதிக்க, அதைச் சற்றும் எதிர்பார்க்காத அந்தக் கன்றுக்குட்டி திகைத்து நிற்கிறது. தனது உரிமையாளர் ஆபத்தில் சிக்கிவிட்டாரோ என்று எண்ணி, கரை ஓரத்தில் நின்றபடி பரிதாபமாகச் சத்தமிட்டுப் பார்க்கிறது. அந்தப் பிஞ்சு உள்ளத்தின் தவிப்பு பார்ப்பவர்களின் நெஞ்சைக் கனக்கச் செய்கிறது.
Animals may not speak, but their actions speak louder than any words ever could!❤️ pic.twitter.com/Qf8ZRqiQyt
— 𝑺𝒂𝒏𝒅𝒉𝒚𝒂𝒂'𝒗 (@vedicvenus_) January 22, 2026
உரிமையாளர் வெளியே வராததைக் கண்டு ஒரு நொடியும் தாமதிக்காத அந்தக் கன்றுக்குட்டி, தண்ணீருக்குப் பயப்படாமல் தனது எஜமானரைக் காப்பாற்ற ஆற்றில் குதித்து விடுகிறது. நீச்சல் தெரியுமா தெரியாதா என்ற எந்தக் கவலையும் இல்லாமல், “தன் உயிர் போனாலும் பரவாயில்லை, தன் எஜமான் வேண்டும்” என்ற அந்தத் தூய்மையான அன்பு ஆற்றில் பாய்ந்த விதம் நெகிழ்ச்சியின் உச்சம். “விலங்குகளுக்கு அறிவு இல்லையென்று சொல்பவர்கள் இதைப் பார்க்கட்டும்” என்று நெட்டிசன்கள் இந்தப் பதிவைப் பகிர்ந்து வருகின்றனர். உண்மையான அன்பிற்கு மொழியோ, உருவமோ தேவையில்லை என்பதற்கு இந்தக் கன்றுக்குட்டியே ஒரு சிறந்த உதாரணம்.
