டெல்லியில் காற்று மாசு காரணமாக 10. 12ஆம் வகுப்புகள் தவிர பிற வகுப்புகளுக்கு நவம்பர் 11ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்படுவதாக அம்மாநில முதல்வர் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். நவ.13 – 20 வரை வாகனங்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்படும். காற்று மாசு தடுப்பு விதியை மீறினால் ரூ.10,000 அபராதம் விதிக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளார். 50% பணியாளர்கள் வீடுகளில் இருந்து பணியாற்ற ஏற்கெனவே உத்தரவிடப்பட்டுள்ளது.