இன்றைய காலகட்டத்தில் சமூக வலைத்தளங்களில் தினம் தோறும் புதுவிதமான வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அதிலும் குறிப்பாக செல்லப் பிராணிகள் குறித்த வீடியோக்கள் அதிகளவில் பகிரப்பட்டு வருவதால் இதனை ரசிப்பதற்கு தனி ஒரு ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. அதன்படி தற்போது வெளியாக்கியுள்ள வீடியோவில் நபர் ஒருவர் தன்னுடைய பூனை குட்டியுடன் மிக ஆர்வமாக விளையாடுகிறார். அவர் பூனையுடன் காயின் மேஜிக்கை செய்து விளையாடுகிறார்.

தனது உள்ளங்கையை திருப்பி வைத்துக் கொண்டு ஒரு நாணயத்தை அதன் மீது வைக்கின்றார். அதன் பிறகு காசை புரட்டி மூடி காசை காட்ட உள்ளங்கையை தூக்குகிறார். அதன் பிறகு அவர் நாணயத்தை பூனைக்குட்டியின் பாதத்தின் மேல் வைத்து விடுகிறார். அது சொல்லிக் கொடுத்ததைப் போலவே காயினை டாஸ் செய்து அதன் சிறிய பாதத்தால் அதனை மூடுகின்றது. அதன் பிறகு நாணயத்தை காட்ட காலை தூக்குகின்றது. இந்த க்யூட்டான வீடியோ தற்போது வெளியாகி பலரையும் வெகுவாக கவர்ந்துள்ளது.