இந்தியாவில் தற்பொழுது ஸ்மார்ட்போன் பயன்பாடு அதிகரித்துவிட்டது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே ஸ்மார்ட்போன்  பயன்படுத்துகிறார்கள். இதற்கு ஏற்றார் போல ஏராளமான வசதிகளும் அம்சங்களும் வந்துவிட்டது. குறிப்பாக டிஜிட்டல் பண பரிவர்த்தனை அதிகம் பேர் மேற்கொண்டு வருகிறார்கள். இதில் பல வகையான மோசடிகளும் தற்போது அரங்கேறி வருகிறது.  இந்த மோசடிகள் நொடிப்பொழுதில் நம்முடைய வங்கி கணக்கிலிருந்து பணத்தை எடுக்க வழி வகுக்கின்றன. நாம் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை ஆன்லைன் மோசடியில் ஒரு நொடியில்  திருடுகிறார்கள்.

இதுபோன்ற இழப்புகள் யாருக்கும்  நடந்து டக்கூடாது என்றால் நாம் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். எனவே யுபிஐ மூலம் நடைபெறும் பல வகையான மோசடிகள் அது எவ்வாறு செயல்படுகிறது? அதிலிருந்து நாம் எவ்வாறு பாதுகாத்துக் கொள்வது? என்பது குறித்து பேமென்ட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா எச்சரிக்கை விடுத்துள்ளது. அதாவது போலியான முதலீட்டுத் திட்டங்கள், உடனடியாக பணம் கிடைக்கும் போன்ற அறிவிப்பு, போலியான பில் மோசடி, போலி வாடிக்கையாளர் சேவை எண், போலியான ஓடிபி போன்ற மோசடிகள் தவிர இன்னும் பல வகையான மோசடிகளும் இருக்கிறது.

ஆன்லைன் மோசடியை தவிர்ப்பதற்காக விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக கியான் சே, தியான சே என்ற பிரச்சாரம் தொடங்கப்பட்டுள்ளது. ஆன்லைன் மோசடியை தடுப்பதற்கு முதலில் டிஜிட்டல் முறையில் நீங்கள் பணம் செலுத்தும் போது உங்களுடைய யுபிஐ பின், குறியீடு, otp ,கடவுச்சொல் போன்ற விவரத்தை யாரிடமும் பகிரக்கூடாது எந்த வகையான லிங்கையும் கிளிக் செய்யாதீர்கள். இணையதளம் மூலமாகவோ அல்லது இணையதளத்தில் தேடுவதன் மூலமாகவும் நிறுவனத்தின் வாடிக்கையாளர் பராமரிப்பு சேவை எண்ணை  அழைக்க வேண்டாம். எந்த வகையான ஆப் அல்லது வங்கி பரிவர்த்தனை நடந்தாலும் உடனடியாக சைபர் காவல் துறையை தொடர்பு கொள்ள வேண்டும்.