சென்னை கொளத்தூர் தொகுதி மறு வாக்கு எண்ணிக்கை மற்றும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் (EVM) சரிபார்ப்பு விவகாரத்தில் இந்தியத் தேர்தல் ஆணையம் (ECI) மிக முக்கியமான விளக்கத்தை அளித்துள்ளது. கொளத்தூர் தொகுதியில் நடைபெற்று வரும் இந்தச் மறு வாக்கு எண்ணிக்கையில் இதுவரை எவ்விதக் குளறுபடிகளும் கண்டறியப்படவில்லை என்று தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது.

​முன்னதாக, திமுக சார்பில் அளிக்கப்பட்ட கோரிக்கையைத் தொடர்ந்து, கொளத்தூர் தொகுதியில் உள்ள 14 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு இயந்திரங்களின் சரிபார்ப்புப் பணிகள் தீவிரமாக நடத்தப்பட்டு வருகின்றன.

​இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள மாவட்ட தேர்தல் அதிகாரி சமீரன், இந்தச் சரிபார்ப்புப் பணியின் போது திமுகவின் முதன்மை முகவர்கள் நேரில் பங்கேற்று ஆய்வு செய்ததாகவும், இதுவரை எந்தவொரு குளறுபடியும் இல்லை என்பதை அவர்களே உறுதி செய்து கையெழுத்திட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

​மேலும், இந்த வாக்குப்பதிவு இயந்திரங்களின் சரிபார்ப்பு மற்றும் தணிக்கைப் பணிகள் அனைத்தும் வரும் ஆகஸ்ட் 4-ஆம் தேதி வரை தொடர்ந்து நடைபெறும் என்றும் மாவட்ட தேர்தல் அதிகாரி சமீரன் குறிப்பிட்டுள்ளார். இதனால் கொளத்தூர் தொகுதியின் மறு வாக்கு எண்ணிக்கை விவகாரம் தற்போது அரசியல் வட்டாரத்திலும் சமூக வலைதளங்களிலும் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.