இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 தொடரின் சனிக்கிழமையன்று சந்தீகரில் நடைபெற்ற ஆட்டத்தில், ராஜஸ்தான் ராயல்ஸ் (RR) அணி பஞ்சாப் கிங்ஸ் (PBKS) அணியை 50 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது. இது பஞ்சாப் அணிக்கு இந்த சீசனில் ஏற்பட்ட முதல் தோல்வியாகும். ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் அணி, இந்த சீசனில் நடைபெறும் தங்களது சொந்த மண்ணில் நடைபெற்ற முதல் ஆட்டத்திலேயே தோல்வி கண்டது.
Jofra Archer power play beast is back
✅ Gets Shreyas Iyer with a ripper pic.twitter.com/kNy9wy9WRX— ICT Fan (@Delphy06) April 5, 2025
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக யஷஸ்வி ஜெய்ஸ்வால் அபார அரைசதம் விளாசி அணியின் ஸ்கோருக்கு வலுசேர்த்தார். அதேபோல் வேகப்பந்து வீரர் ஜோஃப்ரா ஆர்ச்சர் தனது அதிரடி பந்துவீச்சால் பஞ்சாப் அணியின் பேட்டிங் வரிசையை சீர்குலைத்தார். 2008ம் ஆண்டு சாம்பியன் பட்டம் பெற்ற ராஜஸ்தான் அணி, இந்த வெற்றியுடன் மீண்டும் தங்களது ஆட்டதிறனை உறுதி செய்தது.
Jofra Archer 😄#PBKSvRR #IPL2025 pic.twitter.com/NWbJ0aH6jC
— 🇵🇷🇦🇲🇴🇩 🇾🇦🇩🇦🇻 (@PRAMODK27372445) April 5, 2025
இந்த வெற்றிக்குப் பிறகு, சமூக வலைதளங்களில் ரசிகர்கள் மத்தியில் மீம்ஸ்களும் காமெடி பதிவுகளும் வேகமாக பரவி வருகின்றன. “பஞ்சாப் வீடு தான், ஆனால் ஆட்டம் முழுக்க ராஜஸ்தான்தான் ஆடிச்சு!” என்ற பஞ்சாயத்து பாணி மீம்ஸ்கள் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. ராஜஸ்தான் ராயல்ஸின் இந்த ஆதிக்க வெற்றி, அவர்கள் பிளேஆஃப் கனவுக்கு பசுமை ஒளி காட்டியுள்ளது. மேலும் அதே போன்று ஆர்ச்சர் போட்டிக்கு முன்பு வரை தூங்கிக் கொண்டிருந்த நிலையில் திடீரென எழுந்து வந்து இரண்டு விக்கெட்டுகள் வீழ்த்தியதும் தற்போது சமூக வலைதளத்தில் பரவலாக பேசப்படுகிறது.
JOFRA ARCHER picking up wickets today against PBKS.#PBKSvRR #RRvsPBKS #RR #PBKS #IPL #IPL2025 #jofraarcher pic.twitter.com/IbH17l6M47
— Everyday Pursuits (@evrydaypursuit) April 5, 2025
அதாவது டிரெஸ்ஸிங் ரூமில் ஆர்ச்சர் தூங்கிக் கொண்டிருந்த நிலையில் அவரை ராகுல் டிராவிட் தடவி கொடுத்து தட்டி எழுப்புவது போன்றும் பின்னர் அவர் எழுந்து விளையாடிய நிலையில் அதிரடியாக விக்கெட் வீழ்த்தி அசத்தியது போன்ற மீம்ஸ்கள் இணையத்தை கலக்கி வருகிறது.
Dhruv jurel and Riyan parag dropped catch #RRvsPBKS pic.twitter.com/EzqKePFAqb
— Pintu Dera (@pintudera_) April 5, 2025
