நேற்று சேப்பாக்கத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிராக 25 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. சென்னை சூப்பர் கிங்ஸ் ஐந்து முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நேற்று டெல்லி அணியிடம் சொந்த மண்ணில் தோல்வியடைந்தது. சென்னை அணி தனது சொந்த மண்ணில் தொடர்ச்சியாக சந்தித்த இரண்டாவது தோல்வி இதுவாகும். இந்த சீசனில் மூன்றாவது தோல்வியும் இதுவாகும். சென்னை அணி டெல்லி கேபிடல்ஸ் அணியிடம் தோல்வியடைந்ததை அடுத்து சிஎஸ்கே ரசிகர்கள் கோபத்தில் கொந்தளித்து வருகிறார்கள்.
இதனால் சேப்பாக்கம் மைதானத்தில் இருந்து வெளி வந்த ரசிகர்களும் கூட வருத்தத்துடன் இருந்தனர். அப்போது சில ரசிகர்கள் பேசுகையில், “HIGHLIGHTS கூட கட் பண்ண முடியாது இதுல. டிவி சீரியல் பாக்குற மாதிரி இருக்கு மேட்ச் என்றும், நம்ம கேவலமா விளையாடுறோமா? இல்ல எல்லாரும் சூப்பரா விளையாடுறாங்களா? என்றும், “தோனிக்கு பதிலா வேறு ஒருத்தர எடுக்கலாம். அவர் Retire ஆகுறதே நல்லது என்று கொந்தளித்து வருகிறார்கள்.
