தமிழக அரசியலில் தவெக தலைவர் விஜய் குறித்த விவாதங்கள் அனல் பறந்து வரும் நிலையில், நடிகர் சத்யராஜின் குடும்பத்திற்குள்ளேயே இந்த விவகாரம் ஒரு சுவாரசியமான திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
திமுகவில் இணைந்துள்ள சத்யராஜின் மகள் திவ்யா, தொடர்ந்து விஜய் குறித்தும் தவெக குறித்தும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகிறார்.
Sibi Sathyaraj slipper shot reply to her sis in Insta story 🙏🫂💪#TVKForTN@TVKVijayHQ https://t.co/uRDF80afVr pic.twitter.com/5a35tD2sNv
— Jai (@leo0000123123) March 3, 2026
இது சமூக வலைதளங்களில் பெரிய விவாதமாக மாறிய நிலையில், இதுகுறித்து திவ்யாவின் உடன்பிறந்த நடிகருமான சிபி சத்யராஜிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
அரசியலுக்கு வரதுக்கு முன்னாடி மக்களுக்கு என்ன பண்ணிருக்கீங்க..? – தவெக தலைவர் விஜயிக்கு திமுக நிர்வாகி திவ்யா சத்யராஜ் கேள்வி..#DMK | #DivyaSathyaraj | #TVKVijay | #Politics | #PolimerNews pic.twitter.com/EPlwuzPcAi
— Polimer News (@polimernews) March 1, 2026
அதற்குப் பதிலளித்த சிபி, “எனது அக்காவிற்கு என்று ஒரு தனிப்பட்ட அரசியல் கருத்து உள்ளது, அதைச் சொல்ல அவருக்கு முழு உரிமை இருக்கிறது. அதேபோல் எனக்கும் ஒரு கருத்து இருக்கிறது.
எங்களது குடும்பத்தில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு அரசியல் பார்வை உண்டு” என மிகவும் பக்குவமாகப் பதிலளித்துள்ளார். ஒருபுறம் அக்கா திவ்யா விஜய்யை விமர்சித்து வர, தம்பி சிபி சத்யராஜ் அதற்கு நாகரிகமான முறையில் முற்றுப்புள்ளி வைக்க முயன்றிருப்பது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்துள்ளது.
