ஆர்பிஐ வங்கி இப்போ தற்பொழுது அக்கவுண்டில் பணம் இல்லாவிட்டாலும் யூபிஐ நெட்வொர்க் மூலமாக பண பரிமாற்றம் செய்யும் முறையை அறிமுகம் செய்துள்ளது. வங்கிகளில் அனுமதி பெற்ற கிரெடிட் லைன்களில் இருந்து யுபிஐ மூலமாக நேரடியாக வாடிக்கையாளர்கள் பணப்பரிமாற்றம் செய்யலாம். தற்போது வரையிலும் ஓவர் ட்ராப் கணக்குகள் மற்றும் கிரெடிட் கார்டுகள் மட்டுமே யுபிஐயோடு இணைக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது கிரெடிட் லைனை பயன்படுத்தி அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மேலும் கிரெடிட் லைன் மூலமாக செலவு செய்த தொகையை வாடிக்கையாளர்கள் அதன் பிறகு குறிப்பிட்ட தேதிக்குள் செலுத்திக் கொள்ளலாம். ஆனால் தேர்ந்தெடுக்கப்பட்ட வங்கிகள் மற்றும் பயன்பாடுகள் மட்டுமே இந்த அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது. மேலும் வாடிக்கையாளர்கள் தகுதியின் அடிப்படையில் வங்கிகள் 50000 வரையிலும் கடன் வழங்குகிறது.