மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள பார்ஷி பகுதியில் ராஜேந்திர துக்காராம் சவான்(58) என்பவர் வசித்து வருகிறார். இவர் தன்னுடைய விவசாய நிலத்தில் விளைந்த 512 கிலோ வெங்காயத்தை விற்பனை செய்வதற்காக வேளாண்விளை பொருள் விற்பனை கூடத்திற்கு எடுத்து சென்றுள்ளார். இந்நிலையில் கடுமையான விலை வீழ்ச்சியின் காரணமாக ஒரு குவின்டால் வெங்காயம் ரூ.100-க்கு விலை போனது. அதாவது ஒரு கிலோ வெங்காயம் ரூபாய் ஒரு ஒன்றுக்கு மட்டுமே கொள்முதல் செய்யப்பட்டது. மொத்தத்தில் 512 கிலோ வெங்காயத்தை விற்பனை செய்த இவர் இவருக்கு ரூ.512 ரூபாய் மட்டுமே கிடைத்தது அதிலும் லாரி வாடகை சுமை கூலி என ரூபாய் 510 செலவு செய்துள்ளார்.
அதன்படி மீதமுள்ள இரண்டு ரூபாய் மட்டுமே விவசாயி துக்காராம்க்கு கிடைத்துள்ளது. வெங்காயத்தை வாங்கிய கடைக்காரர் விவசாயியிடம் இரண்டு ரூபாய்கான காசோலையை வழங்கிய நிலையில் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதனால் விவசாயி கடும் வேதனை அடைந்துள்ளார். இதுகுறித்து வியாபாரிகள் கூறியதாவது, “வெங்காயம் அதிக அளவில் இந்த வருடம் விளைச்சல் அடைந்துள்ளது. அதன் காரணமாக விலை குறைந்திருக்கிறது. இருப்பினும் தரம் தரமான வெங்காயம் நல்ல விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. தரமற்ற வெங்காயம் குறைந்த விலைக்கு விற்பனை செய்கிறது என கூறியுள்ளார். இந்நிலையில் நஷ்டம் அடைந்த தங்களுக்கு அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் விவசாயிகளுக்கு நியாயம் கிடைக்காவிட்டால் தீக்குளிப்போம். விவசாயிகள் வாழ்வது எப்படி? என ஸ்வபிமானி ஷேத்காரி சங்தனா அமைப்பின் தலைவரும் முன்னாள் எம்பியுமான ராஜூ செட்டி ஆவேசத்துடன் பேசியுள்ளார்.