திருப்பதி ஏழுமலையானை தரிசிப்பதற்காக நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகிறார்கள். உள் மாநிலத்தில் மட்டுமல்லாமல் வெளிமாநிலத்தில் இருந்தும் பக்தர்கள் வருகின்றனர். பக்தர்களின் வசதிக்காக தேவஸ்தானம் சார்பில் ஏராளமான வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தேவஸ்தானம் சார்பில் 300 தரிசன கட்டண டிக்கெட்டுகள் மாதந்தோறும் ஆன்லைனில் வெளியிடப்படுகிறது. அதன்படி மார்ச் மாதத்திற்கான 300 தரிசன டிக்கெட்கள் இன்று காலை 10 மணிக்கு தேவஸ்தானத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டது.

சிறப்பு தரிசன டிக்கெட்டுகள் ஆன்லைனில் வெளியிடப்பட்ட ஒரு மணி நேரத்தில் விற்று தீர்ந்தது. 1 மணி நேரத்தில் 4,45,000 டிக்கெட்கள் விற்பனை செய்ததன் மூலம் சுமார் ரூ.13.38 கோடி வசூலாகியுள்ளது. மே மாதம் அங்க பிரதட்சணம் செய்வதற்கான இலவச டிக்கெட்கள் மதியம் 2 மணி முதல் இணையதளத்தில் வெளியிடப்படுகிறது.