தமிழகத்தில் டாஸ்மாக் விற்பனைக்காகப் புதிய இணையதளம் அறிமுகப்படுத்தப்பட்டது குறித்துச் சமூக வலைதளங்களில் பரவிய வதரிகைகளும், அதனால் பொதுமக்களிடையே ஏற்பட்ட குழப்பங்களும் தற்போது அமைச்சரின் நேரடி விளக்கத்தைத் தொடர்ந்து முடிவுக்கு வந்துள்ளன.
திமுக ஆதரவு ஊடகங்கள் திட்டமிட்டுப் பரப்பிய தவறான தகவல்களுக்கு அமைச்சர் விக்னேஷ் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
அமைச்சர் விக்னேஷ் அளித்த முக்கிய விளக்கங்கள்:
இணையதளம் மூலம் மதுபானங்களை ஆர்டர் செய்து வீட்டிற்கே வரவழைக்கப்படும் என்று பரவிய செய்தி முற்றிலும் பொய்யானது. ஆன்லைனில் எவ்வித ஹோம் டெலிவரியும் செய்யப்படாது. மதுபானங்களை ஆன்லைன் மூலம் மட்டுமே முன்பதிவு செய்து பணம் செலுத்த முடியும். ஆனால், வாடிக்கையாளர் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட கடைக்கு நேரில் சென்றால் மட்டுமே மது வழங்கப்படும்.
ஆன்லைனில் ஆர்டர் செய்யும் போது பெறப்படும் கியூஆர் குறியீட்டை டாஸ்மாக் கடையில் நேரடியாகச் சரிபார்த்த பின்னரே பாட்டில்கள் கையில் வழங்கப்படும். நேரில் சென்று அடையாளத்தை உறுதிப்படுத்திய பிறகே மதுவிற்பனை நடக்கும். ஆன்லைன் சேவையைப் பயன்படுத்தத் தெரியாத அல்லது விரும்பாத பொதுமக்களுக்காகக் வழக்கமான நேரடி முறை எப்போதுபோலச் செயல்படும்.
டாஸ்மாக் முறையைச் சீரமைப்பதன் மூலம் கடைகளில் நீண்ட வரிசையில் நிற்பதைத் தவிர்ப்பது மற்றும் மதுபானங்களை அதிக விலைக்கு விற்பனை செய்யும் முறைகேடுகளைத் தடுப்பதே இந்த நவீன நடைமுறையின் முதன்மைக் குறிக்கோள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
I was genuinely shocked and even got angry at first because I thought the TVK government was introducing a TASMAC website for home delivery of liquor.
But after watching Minister Vignesh’s full clarification, everything became clear.
The fake narrative spread by DMK-aligned… pic.twitter.com/Kbnw2EWLao
— TVK Pulse (@TVKpulse) August 6, 2026
“>
இதன் மூலம் பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும் டாஸ்மாக் கடைகள் படிப்படியாக மூடப்படும் என்றும், முந்தைய ஆட்சியில் நடந்த ஊழல் முறைகேடுகளைத் தடுத்தாலே அரசு வருவாயைப் பெருக்க முடியும் என்றும் அமைச்சர் திட்டவட்டமாக விளக்கமளித்துள்ளார்.
