CM ஸ்டாலின் மார்ச்.1ம் தேதி தனது 70வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதையொட்டி, பொதுமக்கள் CMக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில், திமுக பிரிவு புதிய முயற்சியை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி, www.selfiewithCM.com என்ற தளத்தில் CM-ன் பல்வேறு புகைப்படங்களோடு மக்கள் தங்கள் விருப்பப்படி மெய்நிகர் முறையில் செல்ஃபி எடுத்து, வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூகவலைதளங்களில் DPஆக வைத்து CMக்கு வாழ்த்து செல்லலாம்.
அதுமட்டுமின்றி தொலைபேசியில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்க, திமுகவின் தகவல் தொழில்நுட்ப அணி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 07127 1913 33 என்ற எண்ணில், 30 விநாடிகளில் பதிவு செய்யலாம் என தகவல் வெளியாகியுள்ளது.