தூய்மை பணியாளர்களை தொழில் முனைவோராக ஆக்கும் திட்டம் சென்னையில் விரைவில் செயல்படுத்தப்படும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்துள்ளார்.

அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்து பேசிய முதல்வர் மு.க ஸ்டாலின், இலவச அரசு பேருந்து மூலம் இதுவரை 236 கோடி முறை பெண்கள் பயணம் செய்துள்ளனர். இதன் மூலம் பெண்கள் பொருளாதரத்தில் தன்னிறைவு பெற்று உள்ளனர். இளைஞர்கள் வாழ்க்கையில் ஒளி ஏற்றும் வகையில் நான் முதல்வன் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இலக்கை நோக்கிய பயணத்தில் வெற்றிகரமாக சென்று கொண்டிருக்கிறோம்.

தூய்மை பணியாளர்களை தொழில் முனைவோராக ஆக்கும் திட்டம் சென்னையில் விரைவில் செயல்படுத்தப்படும். மனித கழிவுகளை மனிதர்களை அகற்றுவதை தடுக்க Dacci அமைப்போடு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. நவீன இயந்திரங்கள் மூலம் பாதாள சாக்கடை கழிவுகள் அகற்றப்பட உள்ளது. தூய்மை பணியாளர்களுக்கு தகுந்த பாதுகாப்பை மேம்படுத்த திட்டங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.