தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களாக ஜொலிப்பவர்கள் நடிகர் அஜித் மற்றும் விஜய். பொதுவாக அஜித் மற்றும் விஜய் ரசிகர்களிடையே எப்போதும் மோதல் மற்றும் போட்டிகள் நிலவிக் கொண்டே இருக்கும். அந்த வகையில் ஜனவரி 11-ஆம் தேதி விஜய் மற்றும் அஜித் படங்கள் ஒரே நாளில் ரிலீசாவதால் விஜய் மற்றும் அஜித் ரசிகர்கள் இணையதளத்தில் பல்வேறு விதமாக மோதி கொள்கிறார்கள். இந்நிலையில் கடந்த 1995-ஆம் ஆண்டு விஜய் மற்றும் அஜித் சேர்ந்து நடித்த ராஜாவின் பார்வையிலே என்ற திரைப்படத்தை தற்போது ரீ ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர்.

இந்த படம் ஜனவரி 6-ம் தேதி சென்னை வில்லிவாக்கத்தில் உள்ள ஏஜிஎஸ் திரையரங்கில் ரீ ரிலீஸ் ஆகிறது. மேலும் அஜித் மற்றும் விஜய் ரசிகர்களிடையே தற்போது கடும் மோதல் நிலவிவரும் நிலையில் இருவரும் சேர்ந்து நடித்த ராஜாவின் பார்வையிலே திரைப்படம் தற்போது ரீ-ரிலீசாவது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.