பிரபல மலையாள பாடல் ஆசிரியர் பீயார் பிரசாத் உடல் நலக்குறைவால் இன்று காலமானார். இவருக்கு வயது 62. இவர் பிரியதர்ஷணின் கிளிசுந்தன் மாம்பழம் திரைப்படத்தில் வித்யாசாகர் இசையில் ஆறு பாடல்கள் மற்றும் திலீப் மற்றும் மோகன் லால் படங்களில் 60க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதியுள்ளார். தமிழில் இளையராஜா இசையில் ட்விங்கிள் ட்விங்கிள் லிட்டில் ஸ்டார் படத்தில் ஒரு பாடலை எழுதியுள்ளார். இவர் இன்று திடீரென உயிரிழந்தது திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவரது மறைவுக்கு திரையுலகினர் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.