தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக கொடி கட்டி பறந்து கொண்டிருக்கும் நடிகர் விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படத்தின் டிரைலர் நேற்று வெளியிடப்பட்ட நிலையில் அண்மையில் ஆடியோ வெளியீட்டு விழாவும் நிறைவடைந்தது. இதனைத் தொடர்ந்து படம் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் அனைவரும் எதிர்நோக்கி காத்திருந்த நிலையில் வாரிசு திரைப்படம் ஜனவரி 12ஆம் தேதி வெளியாவதாக அறிவிக்கப்பட்டது.

ஆனால் தற்போது புதிய அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில் வாரிசு திரைப்படம் ஜனவரி 11ஆம் தேதியே வெளியிடப்படுவதாக குறிப்பிட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் மிகுந்த உற்சாகமடைந்துள்ளனர். அஜித் நடித்துள்ள துணிவு திரைப்படம் முன் ஜனவரி 11-ம் தேதி வெளியாவது குறிப்பிடத்தக்கது.