ரிஷப் ஷெட்டி ராஷ்மிகா மோதல் இன்னும் புகைந்து கொண்டிருப்பதாக கன்னட ரசிகர்கள் தெரிவித்து வருகின்றார்கள்.

தமிழ், தெலுங்கு என இரண்டிலும் முன்னணி நடிகையாக வலம் வருகின்றார் ராஷ்மிகா மந்தனா. இவர் நடிப்பில் அண்மையில் வெளியான புஷ்பா, சீதாராமம் உள்ளிட்ட திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது விஜய்யுடன் இணைந்து வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இவர் முதலில் கன்னட திரைப்படத்தில் தான் அறிமுகமானார். அத்திரைப்படத்தை ரிஷப் செட்டி இயக்கி இருந்தார்.

அண்மையில் வெளியான காந்தாரா திரைப்படத்தையும் அவர் தான் இயக்கி இருந்தார். இத்திரைப்படம் தமிழ், ஹிந்தி, தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் நல்ல வரவேற்பை பெற்று வெற்றி வாகை சூட்டியுள்ளது. இந்த நிலையில் பேட்டி ஒன்றில் ரஷ்மிகாவிடம் காந்தாரா திரைப்படத்தை பார்த்தீர்களா என கேட்டபோது இன்னும் பார்க்கவில்லை என பதிலளித்தார்.

இதனால் கன்னட ரசிகர்கள் அவரை ஆபாச வார்த்தைகளால் சோசியல் மீடியாவில் கடுமையாக சாடி வந்தார்கள். மேலும் கன்னட திரைப்படங்களில் இனி நடிக்க கூடாது என்றும் கூறி வந்தார்கள். இதன்பின் அவர் படம் பார்த்துவிட்டதாக கூறிய பின்னரே எதிர்ப்பு அடங்கியது. இந்த நிலையில் கிராக் பார்ட்டி திரைப்படம் வெளியாகி ஆறு ஆண்டுகள் ஆன நிலையில் இயக்குனர் ரிஷப் செட்டி தனது ட்விட்டரில் படத்தில் பணியாற்றிய அனைவரின் பெயரை குறிப்பிட்டு பாராட்டி மகிழ்ச்சி தெரிவித்திருக்கின்றார். ஆனால் அதில் கதாநாயகியாக நடித்த ராஷ்மிகா பெயர் இடம்பெறவில்லை. இதனால் ரிஷப் செட்டி – ராஷ்மிகா மோதல் இன்னும் தொடர்ந்து வருவதாக கன்னட ரசிகர்கள் சோசியல் மீடியாவில் கூறி வருகின்றார்கள்.