தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்த நிலையில் டிசம்பர் மாதத்தில் அதிக அளவிலான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில் அதிகபட்சமாக 75 சதவீதம் அளவுக்கு மழை பெய்யலாம் என்று தெரிவித்துள்ளது. இந்நிலையில் தமிழ்நாட்டில் புயல் கரையை கடந்த நிலையிலும் பல்வேறு மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்குகிறது.

அந்த வகையில் இன்று இரவு 10:00 மணி வரையில் 21 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தற்போது சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி ஈரோடு, கோயம்புத்தூர், நீலகிரி, சிவகங்கை, புதுக்கோட்டை, மதுரை, திண்டுக்கல், வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், திருச்சி, நாமக்கல், சேலம், கரூர், பெரம்பலூர் மற்றும் அரியலூர் ஆகிய மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும் இதேபோன்று கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மற்றும் கடலூர் ஆகிய மாவட்டங்களிலும் மழை பெய்ய வாய்ப்புள்ளது.