புதுக்கோட்டை மாவட்டத்தில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியதாவது, திமுக ஆட்சியில் கூட்டணி மட்டுமே பலமாக உள்ளது. திமுக தனித்து செயல்பட இயலாது. அதிமுக தற்போது பலமான கூட்டணியை அமைத்து வருகிற 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் அமோகமாக வெற்றி பெறும் என தெரிவித்திருந்தார். திமுக ஆட்சிக்கு மக்கள் வரும் சட்டமன்ற தேர்தலில் தக்க பதிலடி கொடுப்பார்கள் என கூறினார்.

மேலும் தற்போது மழை காரணமாக பல்வேறு இடங்களில் தொற்று நோய்கள் பரவுவதாகவும் இதனை சுகாதாரத் துறை கவனத்தில் கொண்டு மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றும் கூறினார். அரசு மருத்துவமனைகளில் போதிய அளவு மருந்து மற்றும் மருத்துவர்கள் இல்லை என பொதுமக்கள் அவதிப்படுவதாகவும் திமுக அரசு இதனை கவனத்தில் கொள்ள வேண்டும் என்றும் கூறியுள்ளார்.