விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஓ.மேட்டுப்பட்டி பாண்டியன் நகரில் பொன்ராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவரது தம்பி காளிராஜ் அதே ஊரில் ஆடு மேய்க்கும் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் மது போதையில் காளிராஜ் வேலைக்கு செல்லாமல் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியில் வசிக்கும் மாரியப்பன் என்பவர் ஏன் வேலைக்கு வரவில்லை? என கூறி காளிராஜை தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கியுள்ளார். மேலும் தனது கையில் வைத்திருந்த கத்தியால் மாரியப்பன் காளிராஜின் காது பகுதியில் வெட்டியதாக தெரிகிறது.

மேலும் ஒழுங்காக வேலைக்கு வரவில்லை என்றால் உன்னை கொலை செய்து விடுவேன் என மிரட்டி விட்டு மாரியப்பன் அங்கிருந்து சென்றார். இதனால் காயமடைந்த காளிராஜை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். இதுகுறித்து பொன்ராஜ் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் மாரியப்பனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.