சேலம் மாவட்டத்தில் உள்ள ரெட்டியூர் அருகே இஸ்மாயில்கான் ஏரி அமைந்துள்ளது. இந்த ஏரியில் நாய்கள் செத்து மிதப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் 10 தெரு நாய்களுக்கும் அதே பகுதியில் வசிக்கும் ஒரு பெண் தினமும் சாப்பாடு கொடுத்து வந்துள்ளார்.

கடந்த 2- ஆம் தேதி முதல் தெருநாய்கள் காணாமல் போய்விட்டது. இதுகுறித்து போலீசார் கூறும்போது, மர்ம நபர்கள் விஷம் வைத்தோ, அடித்தோ தெருநாய்களை கொன்று ஏரியில் வீசி உள்ளனர். இது தொடர்பாக விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளனர்.