விருதுநகர் மாவட்டத்தில் உள்ள குல்லூர்சந்தை பகுதியில் சுமதி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு உதயகுமார்(19) என்ற மகன் இருந்துள்ளார். இவர் தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் உதயகுமார் தனது உறவினர் வீட்டில் இருக்கும் போது திடீரென மயங்கி விழுந்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் உடனடியாக உதயகுமாரை மீட்டு விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.
அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர் உதயகுமார் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து சுமதி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.