விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செஞ்சி வாசுதேவன் தெருவில் பிரகாஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் செஞ்சி அரசு போக்குவரத்து கழக பணிமனையில் ஊழியராக பணிபுரிந்து வந்துள்ளார். நேற்று முன்தினம் பிரகாஷ் இரவு நேரத்தில் பணிமனையில் நிறுத்தப்பட்டிருந்த பேருந்துகளின் மீது ஏறி சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக பேருந்தில் இருந்து தவறி கீழே விழுந்ததால் பிரகாஷின் தலையில் படுகாயம் ஏற்பட்டது.
இதனால் சக ஊழியர்கள் பிரகாஷை மீட்டு செஞ்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதனையடுத்து மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது பிரகாஷ் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.