விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திண்டிவனம் கோவிந்தசாமி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி சார்பாக அங்குள்ள விளையாட்டு மைதானத்தில் நேற்று சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டுள்ளது. இதற்கு கல்லூரி முதல்வர் அறிவுடை நம்பி தலைமை தாங்கியுள்ளார். இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை முனைவர் கண்ணன் செய்தார். இந்நிலையில் மாணவ மாணவிகள் மண்பானையில் பொங்கலிட்டு சூரிய பகவானை வழிபட்டுள்ளனர்.

இதனையடுத்து பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளான சிலம்பாட்டம், கரகாட்டம் நடைபெற்றுள்ளது. இதனை தொடர்ந்து நிகழ்ச்சி முடிந்து வெளியே வந்த மாணவர்கள் கல்லூரி முன்பு வந்த அரசு பேருந்தின் மீது ஏறி குத்தாட்டம் போட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மாணவர்களுக்கு அறிவுரை கூறி அங்கிருந்து அனுப்பி வைத்தனர். இது தொடர்பான வீடியோ காட்சிகள் தற்போது சமூக வளாகத்தில் வேகமாக பரவி வருகிறது.