தெலுங்கு திரைப்பட இசை அமைப்பாளரும், பாடகரும், நடிகருமான ரகு குஞ்சேவின் தந்தை லட்சுமி நாராயண ராவ் (90)  காலமானார். இவருக்கு வராஹலம்மா என்ற மனைவியும், ரகு என்ற மகனும், இரண்டு மகள்களும் உள்ளனர். அவர் உள்ளூர் நீர்ப்பாசன சங்கத்தின் தலைவராக பணியாற்றி வந்தார். லட்சுமிநாராயண ராவின் இறுதிச் சடங்குகள் துகோ மாவட்டம் கொருகொண்டா மண்டலத்தில் உள்ள அவரது சொந்த ஊரான கடராடாவில் இன்று நடைப்பெற்றது.