பாகிஸ்தானின் அப்துல் ரஹ்மான் மக்கியை சர்வதேச பயங்கரவாதியாக ஐ.நா பாதுகாப்பு  கவுன்சில் அறிவித்துள்ளது. இவர் லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பின் தலைவரான ஹபீஸ் சயீத்தின் உறவினர் என்பது குறிப்பிடத்தக்கதாகும். அப்துல் ஏற்கனவே இந்தியா மற்றும் அமெரிக்காவும் தேடப்படும் பயங்கரவாதியாக அறிவித்துள்ளது. இந்நிலையில் அப்துல் பயங்கரவாத அமைப்புக்கு ஆள் சேர்ப்பது, இளைஞர்கள் மத்தியில் உரையாற்றி அவர்களை மூளை சலவை செய்து தாக்குதலுக்கு தயார் படுத்துவது மற்றும் நிதி திரட்டுவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றார். கடந்த 2011 நவம்பர் 26 -இல் இந்தியாவில் நடைபெற்ற மும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட ஹபீஸ் சயீத்தின் மைத்துனர் தான் அப்துல் மக்கி.

இவர் லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்புக்கு தேவையான அனைத்து நிதி ஆதாரங்களையும் திரட்டுவதில் முக்கிய பங்காற்றி வருகிறார். பாகிஸ்தானின் பயங்கரவாத தடுப்பு குழு கடந்த 2020-ஆம் ஆண்டு மக்கியை குற்றவாளி என அறிவித்து சிறை தண்டனையை விதித்தது. அதனை தொடர்ந்து ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் மக்கியை சர்வதேச பயங்கரவாதியை அறிவித்தாலும் கூட சீனா பல்வேறு தருணங்களில் பாகிஸ்தானை சேர்ந்தவர்களை சர்வதேச பயங்கரவாதிகளாக அறிவிக்க முட்டுக்கட்டை போட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும். தற்போது மக்கியை ஐநா பாதுகாப்பு கவுன்சில் சர்வதேச பயங்கரவாதியாக அறிவித்துள்ளது.