சீனாவில் மக்கள் தொகை குறைவிற்கு பொருளாதாரம் தான் காரணம் என சீன மக்கள் தெரிவித்துள்ளனர். சீனாவில் கடந்த 60 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மக்கள் தொகை குறைந்துள்ளது. 1.4 பில்லியன் மக்கள் தொகை கொண்ட சீனாவில் பிறப்பு விகிதங்கள் வீழ்ச்சி அடைந்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி கடந்த ஆண்டு மக்கள் தொகை கணக்கை விட 8.5 லட்சம் இந்த ஆண்டு மக்கள் தொகையில் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள மக்கள், மக்கள்தொகை குறைவிற்கு பொருளாதாரம்தான் காரணம் என கூறியுள்ளனர். மேலும் பொருளாதார நிலையை சமாளிக்க முடியாமல் இளைஞர்கள் பலர் குழந்தைகளை பெற்றெடுத்துக் கொள்ள விரும்பவில்லை என கூறியுள்ளனர்.