கனடாவில் இருக்கும் மகனிடம் பேசிவிட்டு குளிக்கச் சென்ற தாய் குளித்துவிட்டு திரும்பி வந்த போது தனது மகன் உயிருடன் இல்லை என்பதை அறிந்து அதிர்ச்சியில் ஆழ்ந்த சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது. கனடாவில் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் தரைன்லால் என்ற இளைஞர் காரில் பயணித்துக் கொண்டிருந்தார். அப்போது திடீரென அவரது கார் கட்டுப்பாட்டை இழக்க வேலி ஒன்றில் இடித்து தள்ளிவிட்டு மரம் ஒன்றின் மீது வேகமாக அவரது கார் மோதி உள்ளது. கார் மோதிய வேகத்தில் மரமே சாய்ந்து விட்டதாம். இந்த பயங்கர சம்பவம் நிகழ்வதற்கு சற்றுமுன் தான் அவர் தாயிடம் மொபைலில் பேசிக் கொண்டிருக்கின்றார்.

மகனிடம் பேசிய பின் அவர் குளிக்க சென்று இருக்கின்றார். அவர் குளித்துவிட்டு திரும்பி வந்தபோது விபத்து குறித்த தகவல் கிடைக்க சற்றுமுன் தன்னுடன் பேசிக் கொண்டிருந்த தன்மகன் உயிருடன் இல்லை என்பதை அறிந்து அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளார். தனது மகன் காரில் பயணித்துக் கொண்டிருக்கும் போது மழை பெய்து கொண்டிருந்ததாக தெரிவித்த அவரின் தாய் அதை தவிர்த்து விபத்துக்கு வேறு காரணம் இருப்பதாக தனக்கு தெரியவில்லை என்று கூறியுள்ளார்.