
தேனி மாவட்டத்தில் உள்ள கம்பம் பாரதியார் நகர் 5-வது தெருவில் முதல்வன்-நந்தினி(32) தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். ஏற்கனவே முதல்வன் உயிரிழந்து விட்டார். இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த சதீஷ்(23) என்பவருக்கும் நந்தினிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது. அடிக்கடி சதீஷ் நந்தினி வீட்டிற்கு சென்று தனிமையில் இருந்துள்ளார். இதனை அறிந்த சதீஷ் குடும்பத்தினர் அவர்களை கண்டித்தனர்.
ஆனால் அதனை கண்டு கொள்ளாமல் நந்தினியும் சதீஷும் நெருக்கமாக பழகி வந்தனர். இதற்கிடையே கம்பம் உலகத்தேவர் தெருவை சேர்ந்த பிரபாகரன்(26) என்பவர் உடன் நந்தினிக்கு பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்தனர். இதனை அறிந்த சதீஷ் நந்தினியை கண்டித்தார். இதனால் சதீஷ் தன்னை சந்தோஷமாக இருக்க விட மாட்டார் என நினைத்து சதீஷை கொலை செய்யுமாறு நந்தினி பிரபாகரனிடம் கூறியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து நந்தினியை தேடி வந்த சதீஷை கண்ணாடி துண்டை எடுத்து அவரது மார்பு, வயிறு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சரமாரியாக குத்தி பிரபாகரன் கொலை செய்தார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சதீஷ் 2024-ஆம் ஆண்டு மார்ச் மாதம் உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் பிரபாகரன், நந்தினி ஆகிய இருவரையும் கைது செய்தனர். இந்த வழக்கினை விசாரித்த நீதிமன்றம் பிரபாகரனுக்கு ஆயுள் தண்டனையும் 5 ஆயிரம் ரூபாய் விதிக்கப்பட்டது. மேலும் நந்தினிக்கு ஆயுள் தண்டனையும் பத்தாயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.