கர்நாடக மாநிலம் கோலாரில் பதுங்கியிருந்த குர்திஸ் பாஷா மற்றும் அஷ்ரப் ஆகியோரை கைது செய்தது தனிப்படை போலீஸ்..
திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த 12ம் தேதி நள்ளிரவு தொடர்ந்து அடுத்தடுத்து 4 ஏடிஎம்களில் கொள்ளை அடித்து, அதிலிருந்து 73 லட்சம் ரூபாயை மர்ம கும்பல் எடுத்துச் சென்றனர். இது தொடர்பாக 9 தனிப்படைகள் அமைக்கப்பட்டு காவல்துறையினர் கர்நாடகா, ஆந்திரா, ஹரியானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். திருவண்ணாமலை மாவட்டம் எஸ்பி தலைமையிலான தனிப்படையினர் ஹரியானா மாநிலத்திற்கு சென்று, அங்கு தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டதில், அதில் ஏடிஎம் கொள்ளையில் ஈடுபட்ட முக்கிய கும்பலின் தலைவனான ஆரிப், அவரது கூட்டாளி ஆஜாத் ஆகிய இருவரை கைது செய்து தமிழ்நாட்டுக்கு அழைத்து வைத்தனர். அதனைதொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்..
இந்நிலையில் தனிப்படையினர் ஆங்காங்கே கர்நாடக மாநிலம், ஆந்திர மாநிலம் உள்ளிட்ட மேலும் பல்வேறு மாநிலங்களில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இந்நிலையில் கர்நாடக மாநிலம் கோலார் பகுதியில் திருவண்ணாமலையில் கொள்ளையடிக்கப்பட்டு கோலார் பகுதியில் தங்க வைத்திருந்த குர்திஸ் பாஷா மற்றும் அஷ்ரப் ஆகிய 2 குற்றவாளிகளையும் காவல்துறையினர் தற்போது கைது செய்து நகர காவல் நிலையத்திற்கு அழைத்து வந்துள்ளனர்.
மேலும் இந்த குற்றவாளிகளை வடக்கு மண்டல காவல்துறை தலைவர் கண்ணன் அவர்கள் கூறிய போது, 10 குற்றவாளிகள் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளதாகவும், மேலும் பல குற்றவாளிகள் அனைவரும் கைது செய்யப்படுவார்கள் எனவும் கூறப்பட்ட நிலையில், தற்போது 2 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனை தொடர்ந்து அரியானா மாநிலத்தில் மேலும் 3 குற்றவாளிகள் பதுங்கி உள்ளதாகவும் விரைவில் அவர்களை கைது செய்வோம் என மாவட்ட எஸ்பி கார்த்திகேயனும் தகவல் தெரிவித்துள்ளார்.